பேரழகனே..,
ஒத்தையடிப் பாதையிலே
மாமன் உன் நெனைப்போட…
பாவிமக நானும் தளர்ந்த நட நடக்க…
சுற்றுப்புறம் எல்லாம் நீ இல்லாம
சூன்யமாய் போனதடா…
நாம் இருவரும் பேசித் திரிந்த வாய்க்கால் வரப்பு கரை…
ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளையார் கோவில்…
குயில்கள் கூவும் மாந்தோப்பு…
அந்த வழி நான் கடக்கையிலே
உன் நெனைப்பு வந்து நெஞ்சாங்கூட்டில
நெல கொண்டு என்னை வாட்டி வதைப்பதென்ன…
உன்னை நான் நெனைக்கையிலே
ஒரு கூடை பூவு என் மேல தூவிடக்கண்டேனடா…
ஓராயிரம் பட்டாம்பூச்சிக நெஞ்சுக்குள்ள
செறகடிச்சு பறந்திட கண்டேனடா…
எனக்குள்ள உன்னைப் பத்தின
போராடும் எண்ணங்களுக்கு
வழி என்னடா நீ சொல்லப்போற…
நான் வாழ வழி சொல்லப்போறியா
இல்ல இடுகாட்டிற்கு செல்லப்போற
வழி சொல்லப்போறியா…
கூறி விடடா சீக்கிரமே கண்களிலே
கண்ணீர் முட்டி
கவித ஒண்ணு வாசிக்க சொல்லுதடா.
உன்னப் பத்தி என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)