• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோ

ByA.Tamilselvan

Oct 14, 2022

கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் தன்னை பரவசமடைச்செய்ததாக கேரள நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படும் என்பது தெரிந்ததே. அதே போல கேரளாவிலும் அவரது பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று கேரள நடிகை சம்யுக்தா மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது. அந்த போட்டியின் ஒரு பகுதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைரமுத்து, மலையாளம் கலந்த தமிழில் தனது பாடல்வரிகளைக் கூறியதைக் கேட்டு பரவசமடைந்ததாகக் கூறியுள்ளார். தமிழும், மலையாளமும் உறவு மொழிகள் தான் என்ற அவர் கலையால் காலத்தை வென்று விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.