• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் மீண்டும் பரபரப்பு … பெண் மந்திரவாதி கைது

ByK.Thirumalai Raja

Oct 14, 2022

கேரளாவில் மேலும் ஒரு பரபரப்பு சம்பவம் சிறுமிகளை வைத்து பூஜை நடத்திய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் 2 பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாள புழா பகுதியில் பெண் சாமியார் ஒருவர் மந்திரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர் சிறுவர், சிறுமிகளை வைத்து பூஜை நடத்துவதாகவும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த பகுதியில் ஷோபனா (வயது 52) என்ற பெண் வசந்தி அம்மா மடம் நடத்தி வருவது தெரியவந்தது. இந்த மடத்தில் சிறுவர்-சிறுமிகள் சிலர் தங்கி உள்ளனர். அவர்களை வைத்து ஷோபனா பூஜைகள் நடத்துவதும், அங்கிருந்து மந்திர சத்தமும், சிறுவர்களின் அலறல் சத்தமும் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பெண் சாமியார் மற்றும் அவருக்கு உதவியவரையும் கைது செய்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.