மீனாட்சி நகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 24வது ஆண்டு கரக உற்சவம் மற்றும் கத்திப்போடும விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகரில் தேவாங்கர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது .
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடைபெறும் கரக உற்சவ விழா மற்றும் கத்தி போடும் விழா இன்று நடைபெற்றது.24ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து சௌடேஸ்வரி அம்மனை கும்பத்தில் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வருவர் அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் தங்களது மார்பு மற்றும். முதுகுகளில் அடித்துக் கொண்டே ஓம் சக்தி பராசக்தி எனக் கூறி வருவர்
விழாவிற்கான ஏற்பாடுகளை சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் செயலாளர் ராஜேஸ்வரி தலைவர் ராமராஜ் பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்..