• Fri. Apr 26th, 2024

கிராமசபை கூட்டம் போல தமிழகத்தில் இனி ஏரியா சபை கூட்டம்..!

Byவிஷா

May 24, 2023
TN Government

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இனி ஏரியா சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாக்காளர் தினம், சர்வதேச மனித உரிமை நாள், அம்பேத்கர் மற்றும் அண்ணா பிறந்த நாட்களில் ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் மக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *