கருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி இந்தி மொழி எந்த ரூபத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என்று தீவிரமாக இருந்தார். இன்று அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அந்த கொள்கையை கைவிட்டு விட்டார். ‘லால் சிங் சத்தா’ படத்தின் வினியோக உரிமையை பெற்று வெளியிட்டுள்ளார். அரசியலை விட வியாபாரத்திற்குத்தான் முக்கியத்துவம் என்பது வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.