
இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியில் 99 வது பிறந்த நாள் தமிழக முழவதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. . இதைத் தொடர்ந்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கருணாநிதியின் பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் திமுகவினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நலத்திட்டஉதவிகள் வழங்குதல்,ரத்ததான முகாம், அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் என பல வகைகளில் கொண்டாடப்படுகிறது
அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் ஊராட்சியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளைமுன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டபணியாளர்கள் ,பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வெகுவிமர்சையாக கொண்டாடி உள்ளார்.இதுகுறித்து ஊராட்சி மன்றதலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினோம் என்றார்.


