• Mon. Apr 29th, 2024

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே நாம் தமிழர் நிர்வாகி அயன்பாக்ஸால் அடித்து கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே தேவாலய பங்கு தந்தை இல்லத்தில் வைத்து நாம் தமிழர் நிர்வாகி அயன்பாக்ஸால் அடித்து கொலை ஆலய பங்கு தந்தை திமுக பிரமுகர் உட்பட 4பேர் தலைமறைவு சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆரை எடுத்து சென்றதால் காவல்துறை விசாரணையின் தடுமாற்றம் உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே மடத்துவிளை பகுதியை சேர்தவர் சேவியர்குமார் (42)நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வரும் இவர் திங்கள்நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெமீலா மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கோல் அதிதூதர் தேவாலயத்திற்கு சொந்தமான மதர் தெரஸா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் அவரை பள்ளி நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது. இதையடுத்து சேவியர்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குதந்தை குறித்து, அவதூறு பரிப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து இது குறித்து பேசுவதற்காக சேவியர்குமாரை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வளாகத்திலுள்ள பங்குதந்தை இல்லத்திற்கு வருமாறு பங்கு தந்தை ராபின்சன் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சேவியர்குமாரிடம் பங்குதந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் பங்குதந்தை ராபின்சன் மற்றும் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ் பாபு, இவரது சகோதரர் சுரேஷ் ,ஜெஸ்டஸ் ரோக் உள்ளிட்டோர் அயன்பாக்ஸால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியினை டிவீஆர் பதிவு பெட்டியையும் எடுத்து கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்தில் குவிந்ததுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பெரும்பதற்றம் நிலவி வருவதையடுத்து காவல்துறையினர் குவிக்கபட்டது. மேலும் கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவையும் எடுத்து சென்றதால் குற்றவாளிகள் யார் என கண்டறிய முடியாமல் காவல்துறையினர் விசாரணையில் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

மரணம் அடைந்தவரது பூத உடலை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்ல காவல்துறை பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சியினர் தடுத்த நிலையில் இன்று (ஜனவரி_21)அதிகாலை, காவல்துறை மரணம் அடைந்த சேவியர் குமார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனை பிண அறைக்கு எடுத்து சென்றனர்.

பாதிரியார் தங்கும் இல்ல அலுவலகத்தில் நடந்த கொலை செய்தி குமரி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி வரும் நிலையில், இதனை வைத்து குமரி மாவட்டத்தில் இதனை அரசியலாக்கும் சூழல் வந்து விடுமே என்ற அச்சம் நடு நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *