• Sun. Apr 28th, 2024

அரசு போக்குவரத்து மெக்கானிக் சேவியர்குமார் படுகொலை.., ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட மைலோடு தேவாலய பங்கு மக்கள்…

குமரி மாவட்டம் என்பது கிறித்தவ மதத்தைத் சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வசிக்கும் மாவட்டம்.

குமரியில் தான் மத பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் நடக்கும் மாவட்டம் என்பதால், சிறு தீ பொறி கூட காட்டுத் தீ யாகி விடும் நிலையில், அரசு போக்குவரத்து கன்னியாகுமரி கிளையில் மொக்கானிக்காக பணியாற்றும், சேவியர்குமார் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் என்ற நிலையில் தி மு க ,நாம் தமிழர் கட்சி இடையே எப்போதும் ஒரு உரசல் நிலை குமரி மாவட்டத்தில் உள்ளது.

கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமீலா, கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் கீழ் செயல்படும் புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் மதர் தெரசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், பள்ளி நிர்வாகியான பாதிரியார் ராபின்சன் எடுத்த நடவடிக்கை காரணமாக திடிரென்று ஜெமீலா பணி நீக்கம் செய்யப்பட்டதின் காரணமாக,

பங்கு தந்தையும் பள்ளியின் தாளாளர் என்ற நிலையில் ராபின்சன் இடம். சேவியர் குமார் அவரது மனைவியின் பணி நீக்கத்திற்கு என்ன காரணம் என கேட்ட போது, பாதிரியார் முறையாக பதில் சொல்லாது அதிகார தொனியில் பதில் சொன்னது குறித்து. சேவியர் குமார் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

மைலோடு தேவாலைய பங்கு தந்தை சேவியர் குமாரை கை போசியில் தொடர்பு கொண்டு, தேவாலைய மேடைக்கு அழைத்துள்ளார். (பாதிரியார் அலுவலகம் மற்றும் தங்கியிருக்கும் இடம்)

பாதிரியார் ராபின்சன் குறித்த மாலை நேரத்தில் ஜோசப்குமார் உடன் எவரையும் அழைத்துக்கொண்டு செல்லாது தனியாக பாதிரியாரின் மேடைக்கு சென்றவர். அங்கு கண்ட காட்சி. பாதிரியாருடன்.தக்கலை திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் அரசு வழக்கறிஞரான ரமேஷ்பாபு மற்றுமொரு தி மு க பிரமுகருமான சுரேஷ் அங்கிருந்துள்ளனர்.

சூழலின் கொடுமை தெரியாத நிலையில் சேவியர் குமார், பாதிரியார் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் எதிர் வாதங்கள் எழ…… உடன் இருந்த தி மு க .,கட்சியை சேர்ந்த ராஜேஷ் பாபு, சுரேஷ் ஆகியோரும் எச்சரிக்கை தொனியில் பேச சூழலில் நிலையை உணராமல் சேவியர் குமாரும் எதிர் வாதம் செய்ய தீடிரென அயர்ன் பாக்ஸ் கொண்டு சேவியர் குமார் தலைமையில் தாக்குதல் நடந்த நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட சேவியர் குமார். பாதிரியாரின் அலுவலகத்தில் தரை சாய்ந்தததை கண்ட பாதிரியார் உட்பட மூவரும் அங்கிருந்த கேமராவின் பதிவு அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்கள்.

குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவர்களின் கோட்டார் மறைமாவட்டத்திலிருந்து பிறிந்து புதிய மறைவாட்டம் சில ஆண்டுகளுக்கு முன் குழித்துறை மறைமாவட்டம் உருவானது. அதன் முதல் ஆயராக இருந்தவர் ஒரு ஆண்டிலேயே ஆயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வுக்கு சென்று விட்ட நிலையில் மதுரை ஆயர் அந்தோணி பாப்பு சாமி குழித்துறை பொறுப்பு ஆயராக இருந்த சூழலில். கடந்த வாரம் தான் குழித்துறை மறைமாவட்டம் புதிய ஆயராக ஆல்பர்ட் ஐசக் அலெக்சாண்டர் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலே, குழித்துறை மறைமாவட்டம் எல்லைக்குள் உள்ள மைலோடு புனித மைக்கேல் அதிதூதர் தேவாலய பங்கு தந்தை ராபின்சன் மீது கொலைக் குற்றம் சாட்டி, பாதிரியார் மீது ஆயர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழித்துறை மறைமாவட்டம் ஆயர் இல்லத்தின் முன் மைலோடு பங்கு மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.ஆயர் இல்லம் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *