• Sat. Apr 27th, 2024

குமரியில் சோனியா காந்தியின் பெயரில் நிலம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்று என்ற சொல்லாடல் போல், கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரையிலும் பரவி இருப்பது இந்திய தேசிய காங்கிரசும். குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி”பள்ளியாடி” நகரமும், கிராமமும் கலந்த ஒரு பகுதி. இந்த ஊரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் அவரது ஊரின் பெயருடன் நடத்திய பள்ளியாடி ரத்தினா சிட் பன்ட் என்ற நிறுவனம்.தொடங்கிய இடத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிளைகள் பரப்பிய நிறுவனம்.

நிறுவன அதிபர் காங்கிரஸ் ஆதரவளார். இவர் மனதில் துளிர்விட்ட எண்ணம் நேரு குடும்பத்தை சேர்ந்த அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயருக்கு அவரது சொத்தில். குழித்துறை பகுதியில் 25-சென்ட் நிலத்தை சோனியா காந்தியின் பெயரில் பத்திர பதிவு செய்து விட்டு நிலத்தின் பத்திரத்தை அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடம் கொடுப்பதற்கு, குமரி கிழக்கு மாவட்டத்தின் அன்றைய காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ், வாழ்வச்சகோசம் பகுதியைச் சேர்ந்த பாக்கியசுந்தருடன், கனகராஜ்ம் டெல்லி சென்றனர்.

இவர்கள் குழு டெல்லி சென்ற அந்த காலக்கட்டத்தில் நாடாளுமன்ற தொடர் நடந்து கொண்டிருந்த நிலையில், டெல்லி சென்ற குழுவினர் ஒரு வாரம் காத்திருந்ததும் காரியம் நடக்காத நிலையில், அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை பார்த்து கோரிக்கை வைத்தனர்.

நிலத்தின் பதிவு பத்திரத்தை வாங்கி பார்த்த அன்றைய நிதி அமைச்சர் முகத்தில் புன்னகை மலர்ந்ததை பார்த்த அவர்கள் மனதில் நம்பிக்கை மலர்ந்ததாம்.

நிதி அமைச்சர் சிதம்பரம் பரிந்துரை மூலம் அதே நாள் முன் இரவில், டெல்லி ஜென்பத்10_இல்லத்தில் சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜ்யை சந்தித்தனர்.

கனகராஜ் குழுவினரிடம் ஜார்ஜ் தெரிவித்தது. நாளை காலை 11.30.மணி அளவில், நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அன்னையை நீங்கள் சந்திக்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அந்த அலுவலக பகுதி மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த பகுதி. வெளி நாட்டு தூதர்கள், மாநில முதல் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் தலைவியை சந்திக்கும் இடம். உங்கள் உணர்வு நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பரிந்துரை காரணமாக மிகுந்த கட்டுப்பாடு நிறைந்த பகுதியில் குறித்த நேரத்தில் நீங்கள் அன்னையை பார்க்கலாம் என ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த நேரத்தில் சோனியா காந்தியை சந்தித்த குழுவினரை, சோனியா காந்தி அவரது அலுவலகத்தில் எழுந்து நின்று வரவேற்றதுடன். பிரின்ஸ் சொன்ன தகவல்களை புன்னகையோடு செவிமடுத்த நேரத்தில், கனகராஜ் “போட்டோ” எடுத்துக் கொள்ளலாமா.? என வெள்ளந்தியாக தமிழில் கேட்க, அதன் பொருள் புரிந்து கொண்ட சோனியாகாந்தி உதவியாளரிடம், இவர்கள் புகைப்படம் எடுப்பவரை அழைத்து வந்ததும் மீண்டும் அனுமதிக்கவும் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் குமரியை சேர்ந்த டெல்லி சன் தொலைக்காட்சி செய்தியாளர் ராமகிருஷ்ணன் புகைப்படம் எடுக்க ஒரு ஆங்கில நாளிதழின் புகைப்படக்காரரை உடன் அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாங்கிக்கொண்ட நிலத்தின் பத்திரத்தை, குறிப்பிட்ட மாவட்ட தலைவர் என்ற நிலையில் பிரின்ஸ் இடம் ஒப்படைத்தும் விட்டார்.

இத்தனை காலம் நிலம் தரிசாகவே கிடந்தது. கால ஓட்டத்தில் பள்ளியாடி ரத்தினா சிட் பண்டின் அதிபர் கனகராஜ் இந்த புவியில் இருந்து விடை பெற்று விட்டார். காலம் 20- வது ஆண்டை கடந்துவிட்டது.

“தை” பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை உண்மை ஆக்குவது போல், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பெண் பொறுப்பாளர்கள் உட்பட எடுத்த முதல் முயற்சி.

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ் குமார் தலா ரூ.5லட்சம் பொருளாதார உதவியுடன், குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது நன்கொடையுடன், கனகராஜ் கொடுத்த 25_சென்ட் நிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகம் கட்டிடத்திற்கான கட்டிட பணியின் பூமி பூஜையுடன் புதுப்பானையில் புத்தரிசி பொங்கலும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற பலரும் கனகராஜ் ஆத்மா இன்று தான் சாந்தி அடையும் என தெரிவித்தார்கள்.

மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் மற்றும் அல்லாது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், காங்கிரஸ் அலுவலகத்தின் ஒவ்வொரு செங்கலாக உயரும்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தது. குமரி மாவட்டம் காங்கிரஸ்யின் கோட்டை என்றபோதும், இன்று வரை குமரி கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் தான் இதுவரை தொடர்ந்தது. இதில் உள்ள ஒரு பெரும் பிரச்சினை. மாவட்ட தலைவர் மாறும் போதெல்லாம் கட்சியின் அலுவலகம் இடம் மாறியது தடுக்க முடியாததாக இருந்தது.

பள்ளியாடி ரத்தினா சிட் பண்டின் அதிபர் காலம் சென்ற ஐயா கனகராஜ், நேரு குடும்பத்தின் மேலும், அன்னை சோனியா காந்தியின் மீது வைத்திருந்த உயர்ந்த மதிப்பின் அடையாளம் இந்த நிலம். அவர் வாழ்ந்த காலத்தில் சொன்ன அவரது ஒரு விருப்பம். அன்னை சோனியா காந்தி வந்து இந்த காங்கிரஸ் அலுவலகத்தை திறப்பார்கள் என்றால் அவரே கட்டிடத்தை கட்டி தருவதாக சொன்னார். இன்று அந்த மனிதர் புவி வாழ்வில் இல்லை. மானசீகமாக அந்த மனிதருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் எங்களின் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *