• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ரசிகர்களுக்கு கமலின் பிறந்தநாள் ட்ரீட்

Byமதி

Nov 5, 2021

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைபடத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் பார்வை குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த ட்விட்டர் பதிவில், வரும் நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் முதல் பார்வை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.அத்துடன் படத்தின் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.