

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்துவருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் ரகசிய தேடுதல் வேட்டையை துவக்கிய சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சேவுகவீரய்யா மற்றும் தலைமை காவலர் திருமுருகன் ஆகியோர் அடங்கிய சிங்கம்புணரி காவல் துறையினர், சுமார் 3000 ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை வைத்திருந்த கக்கன்ஜி நகர் கணேசன் என்பவர் மகன் சூர்யா(வயது24) என்பவரை இன்று கைது செய்துள்ளனர். சிங்கம்புணரி நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவர், சிவகங்கை சிறையில் அடைக்கப்பட்டார்.
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
