கள்ளிக்குறிச்சி மாணவியின் தாய் இன்று காலை 10.30மணியளவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பரபரபப்பு பேட்டியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்று காலை சந்தித்தனர்.. இந்நிலையில் முதல் மற்றும் 2 வது பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு மாணவி தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாணவியின் வலது மார்பகத்தில் 3 காயங்கள் உள்ளன..வலது பக்கம் விலா எலும்பு அனைத்தும் முறிந்துள்ளது. வலது பக்கம் கல்லீரல் சிதைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் மாணவியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் பேசும் போது “குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம்.குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் உறுதியளித்துள்ளார் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின்மட்டும்தான் கிடைத்திருக்கிறது. அவர்கள் ஒன்றும் குற்றமற்றவர்கள் கிடையாது. அவர்களை குற்றவாளிகள் என கட்டாயம் நிரூபிப்பேன் என கண்கலங்க தெரிவித்தார்.