• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

விமானத்தில் வெடிகுண்டு இல்லை- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது

ByA.Tamilselvan

Aug 27, 2022

விமானத்தில் வெடிகுண்டு இல்லை… தன் சகோதரியை சிக்க வைக்க போதை ஆசாமியின் சதி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர சோதனையில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் சகோதரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவரை சிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் போதையில் மிரட்டல் விடுத்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டது.