கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது .கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கில் 5 பேருக்கும் கோர்ட் ஜாமின் வழங்கியது. அதன் உத்தரவில் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்க வேண்டும் என நிபந்தனை வழங்கிய ஐகோர்ட் மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுவிப்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளது.