• Fri. Dec 13th, 2024

மோடி மனித நேயமிக்க தலைவர் -குலாம் நபி ஆசாத்!!!!

ByA.Tamilselvan

Aug 29, 2022

காங்கிரஸில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் மோடியை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ரகுல்காந்தி குறித்து குற்றாச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸின் தோல்விக்கு காரணம் ராகுல்காந்தியின் செயலற்றதன்மைதான் என பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் என பாராட்டிபேசியுள்ளார். இதுவரை மோடியை முரட்டுத்தனமான மனிதர் என தாம் தவறாக நினைத்துவிட்டதாக குறிப்பிட்ட அவர் தனிப்பட்ட முறையில் ராகுல்மீது எந்தவெறுப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அடுத்து குலாம் நபி தனி கட்சி துவங்குவாரா? அல்லது பாஜகவில் இணைவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.