சிவகாசியில் பாரம்பரியம் மிக்க ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட தென் இந்தியாவின் சிறந்த அசைவ உணவகம் ஜூனியர் குப்பண்ணா சிவகாசியில் தனது கிளையினை துவங்கியுள்ளது . இந்த உணவக கிளையினை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குநர் எ.பி. செல்வராஜ், சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AMSG அசோகன், தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் செயலாளர் R.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல்ஸ் அசோசியேஷன் இணை செயலாளர் KL குமார், ஜூனியர் குப்பண்ணா இயக்குநர்கள் மூர்த்தி , ஆறுமுகன் மற்றும் விருது நகர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள் .. ஒரே நேரத்தில் 64 நபர்கள் அமர்ந்து உணவருத்தக் கூடிய ஏசி வசதியுடன் கூடிய சிறந்த அசைவ உணவகம் D/2 PKN ரோடு , பழைய விருதுநகர் சாலை , சிவகாசி (ஸ்ரீபதி சூப்பர் மார்க்கெட் மாடியில் அமைத்துள்ளது) விழாவில் ஜூனியர் குப்பண்ணா சிவகாசி கிளையின் Francisee உரிமையாளர் மாரியப்பன் தென் இந்தியாவின் ஒரு சிறந்த அசைவ உணவகத்தை சிவகாசிக்கு கொண்டு வந்ததில் பெருமை அடைவதாகவும் காலை 11.30 மணி முதல் இரவு 11 வரை செயல்படும். 50 வகை அசைவ உணவு வகைகளுக்கு மேல் இங்கு கிடைக்கும், அசைவப் பிரியர்களுக்கு சிறந்த விருந்தாக இருக்கும் என்று கூறினார்.