• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேரறிஞர் அண்ணாவின் அறிவுப்புலமையைக் கண்டு வியந்த பத்திரிகை நிருபர்..!

Byவிஷா

Jan 28, 2022

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் எம்.ஏ படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.
அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம், “நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்…”என்றார்.

அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.
நிருபர் துணிச்சலாக “உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே…நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?…” என்றார். அண்ணாவும் “கேளுங்க தம்பி…” என்றார் ஆங்கிலத்தில்.
உடனே நிருபர் கேட்டார்.”ஆங்கிலத்தில் 100 வார்த்தைகளுக்கு ‘ஏ’ என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?…” என்றார்.

உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், “தம்பி, 1 முதல் 100 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள். கடைசியில் ‘ஸ்;டாப்’ என்று ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்…” என்றார்.


இந்தப் பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அன்றுதான் நிறையபேருக்கு தெரிய ஆரம்பித்தது 0 முதல் 100 வரை ஆங்கிலத்தில் “ஏ” என்ற எழுத்தே வராது என்று.