மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் தினமணி நாளிதழ் செய்தியாளர் தர்மராஜன் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




