• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

நிதி ஆணைய தலைவர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Jun 25, 2026

மதுரை மாநகராட்சி 7வது மாநில நிதி ஆணையம் தலைவர் அலாவுதீன், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், அம்ரூத் 2.0 குடிநீர் திட்டம்,
முதல்வர் படைப்பகம், வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட செயல்பாடுகள், முதல்வர் படிப்பகம், ஒருங்கிணைந்த படிப்பக வளாகம், வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து 7வது மாநில நிதி ஆணையம் தலைவர் அலாவுதீன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், தலைமை வகித்தார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3வது தளத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் 1) மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் (SCADA) கண்காணிப்பு பணிகள், நீர் சுத்திகரிப்பு நிலையம், OHTகளில் நீர் நிலைகளைக் கண்காணித்தல், 2) முல்லைப் பெரியாறு நீர் வழங்கல் திட்டத்தை (SCADA) 24 X 7 கண்காணித்தல், 3) நீர் நிரப்புதல் மற்றும் விநியோக முறைக்கான நீர் நிலைகள் குறித்து OHT ஆபரேட்டர்களுக்குத் தெரிவித்தல். 4) பொதுமக்கள் குறை மேலாண்மை அமைப்பு: புகார் பதிவு, கண்காணிப்பு மையம், 5) ஸ்மார்ட் மதுரை ஆப் செயலியின் புகார் தீர்வு நடவடிக்கைகள் சரியான பதிவேட்டில் மேற்கொள்ளப்படுவதை கண்காணித்தல். 6) குப்பை சேகரிக்கும் வாகனங்களின் வகை வாரியான கண்காணிப்புடன் நிகழ்நேர வாகன கண்காணிப்பை (GPS) செயல்படுத்துதல், 7) நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்து வதற்கும் AI அடிப்படையிலான ஸ்மார்ட் கேமரா மூலம் கண் காணித்தல், 8) அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களின் டிஜிட்டல் மேப்பிங் மூலம் பொது சுகாதார சேவைகள் கண்காணிப்பு 9) தெரு விளக்கு கண்காணிப்பு API அடிப்படையிலான ஒருங்கிணைப்பு மூலம் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்தில் கண்காணிக்கப் பட்டு வரும் பணிகளை 7வது மாநில நிதி ஆணையத் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து ,மதுரை மாநகராட்சி டாக்டர் தங்கராஜ் சாலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த படிப்பக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவிகள் இவ்வளாகத்தில் பயின்று வருகிறார்கள். இவ்வளாகத்தில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் , தமுக்கம் சாலையில் மதுரை மாநாட்டு மையம் எதிரில் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்தின் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார். மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலிருந்து சேரும் குப்பைகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு பணிகள் மற்றும் அவனியாபுரத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அம்ரூத் திட்டத்தின் கீழ் விடுப்பட்ட வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் , துணை ஆணையாளர்கள் ஜெய்னுலாப்தீன், இராஜாராம், தலைமை பொறியாளர் பாபு, மாநகர்நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், மணியன், முத்து, பாலமுருகன், பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.