இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டதாகும். சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகவும், மிகப்பெரிய பொது போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகவும் இந்திய ரயில்வே விளங்குகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் கடந்த 1853 ஆம் ஆண்டு பம்பாய் – தானே இடையே ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நீராவி இன்ஜின்களின் மூலம் இந்திய ரயில்வேயின் பயணம் தொடங்கியது. சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் உலகின் மிகப்பெரும் அரசுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே திகழ்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே மிக வேகமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் 100% மின்மயமாக்கப்பட்ட பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் செலவும் கார்பன் உமிழ்வும் குறைந்துள்ளன. சரக்கு போக்குவரத்துக்காக தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சரக்கு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் சரக்கு ரயில்களின் வேகம் மற்றும் திறன் அதிகரித்துள்ளது.
இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக தான் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Semi High Speed ரயிலான வந்தே பாரத்,
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி புது டெல்லியில் இருந்து வாரணாசி வரை பிரதமர் நரேந்திர மோடியால் முதல் பயணிகள் சேவையை தொடங்கியது. அதிவேக இயக்கம், நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, தற்போது நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இந்தியாவில் உள்ள சுமார் 270 மாவட்டங்களை இணைத்து பயணம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில்,
2025–26 நிதியாண்டில் மட்டும் வந்தே பாரத் ரயில்களில் 3.98 கோடி (39.8 மில்லியன்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். நாடு முழுவதும் சராசரியாக தினமும் சுமார் 1.1 லட்சம் பேர் வந்தே பாரத் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட 2019 முதல் 2026 வரை, 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணச் சுற்றுகளை (trips) நிறைவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் தெற்கு ரயில்வேயின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகளிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவற்றில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வருவாயும் ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டில் 54.12 லட்சம் பயணிகள் மற்றும் ₹540.65 கோடி வருவாய் என்ற நிலையிலிருந்து, 2025-26 ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் 24 வந்தே பாரத் சேவைகள் மூலம் மொத்தம் 77.38 லட்சம் பயணிகள் பயணிம் மேற்கொள்ளவும், ₹803.86 கோடி வருவாய் ஈட்டவும் முடிந்தது.
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்டு வரும் உயர்தர சேவையின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை தெளிவாகப் பிரதிபலிக்கிறது. மங்களூரு – திருவனந்தபுரம், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்கள், தொடர்ந்து 100%-க்கும் அதிகமான இருக்கை பயன்பாட்டு அளவைப் பதிவு செய்துள்ளன. பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை இவை உறுதி செய்கின்றன.
2026-27 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே 2026) மட்டும், இந்த ரயில்கள் 15.21 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று ₹162.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. அதேபோன்று, ‘நடப்பு முன்பதிவு’ (Current-Booking) வசதி மூலம் ரயில்களில் முழுமையான இருக்கை பயன்பாடு மற்றும் பயணிகளின் கடைசி நேரப் பயணமும் எளிதாக மாற்றப்பட்டுள்ளது.
இருக்கை பயன்பாட்டு அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தபோதிலும், தெற்கு ரயில்வேயின் மேற்கொண்ட ‘நடப்பு முன்பதிவு’ என்ற புதிய முயற்சி பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை, ரயிலின் தொடக்க நிலையங்கள் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்தே ஆக வேண்டிய பயணிகளும் எளிதாக முன்பதிவு செய்துகொள்ள முடிகிறது.
சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ரயில்களில், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிந்தைய (ஆகஸ்ட்-அக்டோபர் 2025) நிலையை ஒப்பிட்டுப் பார்க்கையில், கிட்டத்தட்ட அனைத்து வழித்தடங்களிலும் ‘நடப்பு முன்பதிவு’ மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கையிலும் வருவாயிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
ரயில் வாரியான ஒப்பீடு – நடப்பு முன்பதிவு பயணிகள் மற்றும் வருவாய்
(வ.எண் –
தடம் –
சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஏப். – ஜூன் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் எண்ணிக்கை (ஆக. – அக் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஏப். – ஜூன் 2025)
சராசரி நடப்பு முன்பதிவு வருவாய் (ஆக. – அக் 2025)
20631 – மங்களூரு to திருவனந்தபுரம் – 3,335 – 6,954 – ரூ.22.24 லட்சம் – ரூ.45.01 லட்சம்
20632 – திருவனந்தபுரம் to மங்களூரு – 5,164 – 11,896 – ரூ.32.79 லட்சம் – ரூ.73.35 லட்சம்
20627 – சென்னை எழும்பூர் to நாகர்கோவில் – 1,501 – 2,832 – ரூ.14.36 லட்சம் – ரூ.28.98 லட்சம்
20628 – நாகர்கோயில் to சென்னை எழும்பூர் – 1,788 – 3.846 – ரூ.15.51 லட்சம் – ரூ.36.34 லட்சம்
20642 – கோயம்புத்தூர் to பெங்களூர் கண்டோன்மென்ட் – 878 – 835 – ரூ.6.84 லட்சம் – ரூ.6.68 லட்சம்
20646 – மங்களூரு to – மடகாவோன் (கோவா) சந்திப்பு – 690 – 667 – ரூ.6.21 லட்சம் – ரூ.6.25 லட்சம்
20671 – மதுரை சந்திப்பு to – பெங்களூரு கண்ட்டோன்மென்ட் – 544 – 725 – ரூ.4.94 லட்சம் – ரூ.6.69 லட்சம்
20677 – சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் to விஜயவாடா – 2,829 – 2,512 – ரூ.21.91 லட்சம் – ரூ.18.87 லட்சம்) அட்டவணையாக பதிவிடவும்
(அளவுகோல் –
ஏப்.-ஜூன் 2025 –
ஆக.-அக்.2025 –
வளர்ச்சி –
சராசரியாக நடப்பு முன்பதிவு செய்த பயணிகள் – 16,729 – 30267 – 80.93%
நடப்பு முன்பதிவு மூலம் பெற்ற சராசரி வருவாய் – ரூ.124.80 லட்சம் – ரூ.222.17 லட்சம் – 78.02%)
அட்டவணையாக பதிவிடவும்
இதனால் தெற்கு ரயில்வே, ‘நடப்பு முன்பதிவு’ முறையை அனைத்து வந்தே பாரத் ரயில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 17 வந்தே பாரத் ரயில்களிலும், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை பயணத்தைத் தொடங்கும் நிலையம் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் ‘நடப்பு முன்பதிவு’ (current-booking) வசதி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகமான பயணிகள் தேவை மற்றும் ‘நடப்பு முன்பதிவு’ வசதி ஆகியவற்றின் கூட்டு விளைவே தற்போது தெற்கு ரயில்வேயின் அனைத்து வந்தே பாரத் ரயில்களின் செயல்பாட்டிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
தெற்கு ரயில்வே – வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
(அளவுகோல் –
நி.ஆ 2024-25 –
நி.ஆ 2025-26 –
ஏப்.-மே 2025 –
ஏப்.-மே 2026 –
மொத்த வருவாய் (கோடியில்) – ரூ.540.65 – ரூ.803.86 – ரூ.119.52 – ரூ.162.96
பயணம் செய்த மொத்த பயணிகள் (லட்சத்தில்) – 52.12 – 77.38 – 11.41 – 15.21
நடப்பு முன்பதிவின் மூலம் பயணம் செய்த பயணிகள் – 2,98,989 – 7,42,428 – 61,990 – 1,39,817
நடப்பு முன்பதின் மூலம் பெறப்பட்ட வருவாய் (லட்சத்தில்) – 2,181.53 – 5.706.75 – 444.28 – 1,013.50)
அட்டவணையாக பதிவிடவும்
இதுகுறித்து ரயில் ஆர்வலரும் பெங்களூருவில் பணியாற்றும் ஐடி வல்லுநருமான அருண்பாண்டியன் கூறுகையில், விரைவு மற்றும் சொகுசான பயணத்தின் அடிப்படையில் தற்போது ரயில் பயணிகள் வந்தே பாரத் ரயில்களை தேர்வு செய்கின்றனர். அது மட்டுமன்றி தற்போது நடப்பு முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது அவர்களுக்கு பெரிதும் வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது. காரணம் சென்னையிலிருந்து மதுரைக்கு கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு வருவதற்கு ஆகும் செலவில் கால் பங்கு கூட வந்தே பாரத் கட்டணத்தில் கிடையாது. மேலும் பகல் நேர விரைவு பயணத்திற்கு வந்தே பாரத் ரயில்களை பயணிகள் தேர்வு செய்கின்றனர். நமது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Semi High Speed ரயில் இதுவாகும். அந்த வகையில் இந்தியன் ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி. நமது ரயில்வே இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்தே பாரத் ரயிலை இயக்க முன்வருமானால் நிச்சயம் பயணிகள் வரவேற்பு அபரிமிதமாக இருக்கும் என்பதே எனது கருத்து’ என்றார்.




