• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மோடிக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்

Byகாயத்ரி

Nov 22, 2021

டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ளும் படி பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியாவை அளித்துள்ள அமெரிக்கா சில காரணங்களால் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் அழைப்பு அனுப்பவில்லை. மோடி உள்பட 108 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்க உள்ள இந்த உச்சி மாநாட்டில் இலங்கை, வங்காள தேசம், பூட்டான் போன்ற நாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிடையே நிலவும் பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.