மத்திய அரசின் தவறான ஆட்சி முறையை கண்டித்து இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் காங்கிரஸ் கட்சி தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நாகர்கோவிலில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தை துவக்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று தொகுதி எம்பி விஜய் வசந்த் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் தெருமுனை பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். முன்னதாக விஜய் வசந்த் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ” மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன,
விவசாயிகளின் போராட்டத்தை வாபஸ் பெற்றதன் பின்னணி குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காகவும், நாடு முழுவதும் நடந்து வரும் பாலியல் பலாத்காரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொது மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காக இந்த பேரணி நடைபெறுகிறது இது இன்று முதல் வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் என்று கூறினார்.