• Thu. Mar 28th, 2024

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயருக்கு ஜன.2ல் ஜெயந்தி விழா..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு வரும் 2 ம் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதால் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகள் செய்யும் பணிகள் கோவிலில் இன்று தொடங்கியது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோயிலில் மூலவர் எப்படி பிரசித்தி பெற்றவரோ அதுபோல 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமியும் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

கோயிலுக்கு வருபவர்கள் ஆஞ்சநேய ஸ்வாமியை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை அந்த அளவு பிரசித்திபெற்ற ஆஞ்சநேயருக்கு வழக்கமாக மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் வரும் 2ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவதற்காக ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த லட்டு தயாரிப்பிற்காக ஒன்றரை கிலோ கடலை மாவு, அஞ்சு கிலோ சீனி, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 300 பணியாளர்கள் தட்டு தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விசுவல்

  1. குமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் சுவாமி கோவில்.
  2. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி.
  3. லட்டுகள் தயார் செய்யும் பணிகள் நடைபெறுதல்.
  4. பேட்டி கோபால கிருஷ்ணன் ( கோவில் சமையல் கலைஞர் – சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் சுவாமி கோவில் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *