

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் கைதி. கார்த்தி நடித்து இருந்த அந்த படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை என வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் ட்ரெண்டை லோகேஷ் பின்பற்றி இருக்க மாட்டார்.
கைதி படத்தின் கிளைமாக்சில் இரண்டாம் பாகத்திற்கான ஹின்ட் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனால் கைதி 2 எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது லோகேஷ் தற்போது இயக்கி வரும் விக்ரம் படம் முடிந்தபிறகு கைதி 2 பட ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் நடிக்கும் விக்ரம் படம் 2022 கோடி விடுமுறைக்கு ரிலீஸ் ஆன பிறகு தான் லோகேஷ் கைதி 2 பட பணிகளை தொடங்குவார் என தெரிகிறது.
கைதி 2ல் தில்லியின் பின்னணி, அவர் சிறைக்கு சென்றது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்..