• Wed. Mar 26th, 2025

ஜெயலலிதாவின் திருவுருப்படத்திற்கு கே.டி.இராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை

ByK Kaliraj

Feb 24, 2025

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட இளைஞரணி, சிவகாசி கிழக்கு பகுதி அதிமுக இணைந்து சிவகாசி பஸ் ஸ்டாண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி.இராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பலராமன், நகர மன்ற உறுப்பினர் சரவண பாண்டியன், முன்னாள் யூனியன் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.