• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாளை ஜெயலலிதா மரண அறிக்கை சட்டசபையில் தாக்கல்

ByA.Tamilselvan

Oct 17, 2022

தமிழக சட்டசபையில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் என 2 நாட்கள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. நாளைய சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது.