• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஜன.26 கிராமசபை கூட்டம் : தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு..!

Byவிஷா

Jan 23, 2024

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி தலைவர் என அனைவரும் கலந்து கொள்வார்கள். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளை கோரிக்கைகளாக முன் வைக்கலாம்.
இந்த நிலையில் மாவட்ட கல்வித்துறை கிராமசபை கூட்டங்களில் அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இவர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கூட்டமைப்பை உருவாக்குவது, பள்ளிகளை தூய்மையாக பராமரிக்கும் செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக பேச வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.