• Tue. Feb 18th, 2025

ஜல்லிக்கட்டு முடிவடைந்தது. ஆட்சியர் சங்கீதா பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jan 16, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முடிவடைந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேட்டி…

ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடத்திருப்பது குறித்து பத்திரிகையாளராகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆயிரம் காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டது குறித்த கேள்விக்கு சென்ற ஆண்டு நிறைய காளைகள் படுத்துவிட்டது. எழுப்பி வருவதற்குள் தாமதமாகியது. இந்த ஆண்டு அதை சரி செய்ததால் கூடுதல் காளைகள் இறக்குவது சாத்தியமானது.

ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஜனவரி முதல் மே வரை யார் வேண்டுமானாலும் தனி நபர் ஆர்கனைசேஷன் நிகழ்ச்சிகள் நடத்தலாம். அதற்கான அரசாணை இப்போதுதான் வெளிவரப் போகிறது. இனிமேல் அங்கு எல்லா நிகழ்வுகளும் நடக்கும்.

இன்று 52 பேர் காயம் அடைந்தனர். 15 பேர் பெரிய காயம், மற்றவர்கள் சிறிய காயங்கள் பெரிய காயத்துடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக உள்ளார்கள்.

மூன்று ஜல்லிக்கட்டுகளும் கலைஞர் ஏறுதழுவல் அரங்கத்தில் நடக்குமா என்ற கேள்விக்கு,

இது பாரம்பரியமாக அவங்கவங்க ஊருக்குள்ள பாரம்பரியம். அதை நாம் மாற்ற முடியாது. அது மக்களுடைய சென்டிமென்ட்டோட இணைந்தது. வழக்கம்போல் எப்பொழுதும் இங்குதான் நடக்கும். அதுபோக எத்தனை ஜல்லிக்கட்டு வேண்டுமானாலும் கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தில் பண்ண முடியும்.

உள்ளூர் மாடுகள் புறக்கணிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு,

ஏற்கனவே அவங்களுக்கெல்லாம் டோக்கன் வந்திருந்தது. அவங்களுக்கு உள்ள பயம் என்னன்னா 700, 800 என்று டோக்கன் நம்பர் வந்ததால் அவிழ்க்க முடியாமல் போயிருமோ என்ற பயத்தில் தான் போராட்டம் பண்ணினார்கள். அப்படி இல்லாம ஆயிரம் காளைகள் அவுத்து எல்லோருடைய காளைகளும் அவுத்து விடப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் இரண்டு சுற்று பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு,

வழக்கம் போல் ஒன்பது சுற்றுகள் நடத்தப்பட வேண்டும் இன்று 8 சுற்றுகள் தான் நடத்த முடிந்தது. அதனால் கடைசி ரவுண்டில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு கடைசி ரவுண்டால் தான் முடியும். அதனால் அந்த சுற்றுகளை நிறுத்த வேண்டியது ஆகிவிட்டது.

துணை முதல்வர் வழக்கமாக இங்கு வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பது வழக்கம் தான். அதேபோல் இந்த முறையும் ஆர்வத்தோடு வந்து பங்கேற்று சென்று இருக்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவமதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு,

இது தவறுதலான செய்தி பரவிக்கிட்டு இருக்கு. நீங்க எல்லாருமே இங்கு தான் இருந்தீர்கள். உங்கள் கண்ணு முன்னாடி தான் நடந்தது. யாரும், யாரையும் எதுவும் பண்ணல சுமூகமா நல்லபடியாக நடந்தது.

இல்லை நாங்கள் எழுந்தெல்லாம் போகவில்லை. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எழுந்து பேசுங்கள் என்று சொல்லிக்கிட்டு இருந்ததால், ஒரு அமைச்சர் நிற்கும்போது மாவட்ட ஆட்சித் தலைவர் நிற்க வேண்டும் என்பதனால் புரட்டகால் படி தான் நான் நின்றேன் யாரும் என்னை நிற்க சொல்லவில்லை. யாரும் வந்து எழுந்திருக்கவும் சொல்லவில்லை.இங்கு நடந்தது எதுவும் தெரியாமல் கிடைக்கக்கூடிய புகைப்படங்களை வைத்து ஆளாளுக்கு ஒரு கதை பேசிகிட்டு இருக்காங்க. அதற்கெல்லாம் நாம பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.

ஜல்லிக்கட்டில் குளறுபடிகள் இருப்பதாக என்ற கேள்விக்கு,

அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை. நீங்கள் புதுசாக சொல்கிறீர்கள். எந்த ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படவில்லை. பாலமேட்டில் ஏழு காளைகள் அவிழ்த்தார்கள். இங்க வந்து மூன்று காளைகள் அவிழ்த்தார்கள். நேரமானதால் தாமதம் ஆகியது வேண்டுமென்றே யாரும் தாமதம்பண்ண வில்லை. இவ்வாறு கூறினார்.