மதுரை விளாச்சேரியில் கிராமப்புற மாணவர்களுக்கான தேர்வு கொண்டாடும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள விளாச்சேரியில் கிராம இளைஞர் மன்றம் சார்பில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் , வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “தேர்வை கொண்டாடுவோம்” என மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் சிவ சரவணன் தலைமை தாங்கினார். இளைஞர் மன்ற செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் மாணவர்களுக்கான “தேர்வை கொண்டாடுவோம்” விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் தேர்வினால் ஏற்படும் மன அழுத்தம் போக்கவும், எளிய முறையில் தேர்வுகளை எழுதவும் அவற்றிற்கான புதிய வழிமுறைகளை கடைபிடிக்க கற்கண்டு கணிதம் என்ற தலைப்பில் ஆசிரியர் சிவராமகிருஷ்ணன், தித்திக்கும் தமிழ் என்ற தலைப்பில் ஆசிரியர் ஆனந்த், ஈஸி இங்கிலீஷ் என்ற தலைப்பில் ஆசிரியர் சிவபாரதி, மின்னும் பொறியியல் தலைப்பில் முகமது அஜ்மல் கான், ஆளும் அறிவியல் ஆசிரியர் வசந்த் , சாதிக்கும் சமூக அறிவியல் சந்திரா வந்தன செல்வி ஆகியோர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான எளிய முறையில் தேர்வு எழுதல் குறித்து விளக்கம் அளித்து உற்சாகப்படுத்தினர்.

கிராமப்புற மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு பெற்றிடவும் தேர்வினால் ஏற்படும் மன அழுத்தம் பயம் போன்றவற்றை நீக்கி அவர்கள் தேர்வில் சாதனை புரிய “தேர்வை கொண்டாடுவோம்”, விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
மாணவர்களுக்கானதேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விளாச்சேரி கிராம இளைஞர் மன்றம் சார்பில் நடைபெற்றது.
