• Tue. Feb 18th, 2025

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா

ByP.Thangapandi

Jan 17, 2025

உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அதிமுக நகர செயலாளர் பூமாராஜா, முன்னாள் எம்.எல்.ஏ ஐ.மகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

இதே போல் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் திருவுருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.

மேலும் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு அமமுக சார்பில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் மார்கெட் பிச்சை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.