
திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வத்தோடு பிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியில் அந்தர நாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுகளும் 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடி வாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வத்தோடு பிடித்தனர்.
அருகே உள்ள மாவட்டங்களான சிவகங்கை ராமநாதபுரம்திருச்சி தஞ்சாவூர்ஆகிய பகுதிகளில் இருந்து 300 மாடுகள் கலந்து கொண்டன.
இதில் வெற்றி பெற்ற மார்ட்டின் உரிமையாளருக்கும் அதே போல் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
விரு விருப்பாக நடைபெற்று வரும்ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமையம் காவல்துறையினர் செய்து இருந்தனர்.
