
புதுக்கோட்டை கருவேப்பிலான் கேட் அருகிலுள்ள உள்ள மருதுபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமராஜ் இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி நிர்மலா பிரேமராஜ் சொந்த அலுவல் காரணமாக வெளியூர் சென்றுள்ளார். மனைவி நிர்மலா தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இன்று அதிகாலை வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நிர்மலாவை தள்ளிவிட்டு வீட்டில் பீரோவை உடைத்து வீட்டில் இருந்த ரொக்க பணம் 40 ஆயிரம் மற்றும் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
அதன் பிறகு சுதாரித்து எழுந்த நிர்மலா அக்கம் பக்கம் வீடுகளில் கூச்சலிட்டு அழைத்து நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து திருக்கோகர்ணம் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
