புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன் மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் சூர்யா பழனியப்பன் மாநகர தலைவர் பாருக் ஜெய்லானி ஆகியோர் முன்னிலையில் ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர் இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம் விவசாய அணி தனபதி ராமநாதன் கவுன்சிலர் ராஜா முகமது சிவக்குமார் செம்பாட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா அன்னவாசல் வட்டார பொறுப்பாளர் பால்ராஜ் துரை கண்ணன் மாவட்ட O B C அணி பொதுச்செயலாளர் ஆறுமுகம் தினேஷ் குமார் காதர் மைதீன் நாச்சிமுத்து சகாய ராஜ் மகளிர் காங்கிரஸ் மகாலட்சுமி சிவந்தி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.