• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என்பது உண்மை அல்ல

ByA.Tamilselvan

Jul 5, 2022

தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரப்பட்டுவரும் செய்தி உண்மை அல்ல என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
அல்பெலியன் நிகழ்வு குறித்து ஊட கங்களில் பரப்பப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் அறிவில் பிரச்சார மாநில ஒருங்கி ணைப்பாளர் எஸ்.ஆர்.சேதுராமன் தெரி வித்துள்ளதாவது: அல்பெலியன் நிகழ்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகிறது. இன்று ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக் கும் என்றும் இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது என்றும் தகவல் கள் பரவியுள்ளன. ‘

இந்த தகவலின் உண்மைதான் என்ன..?

பலரும் இதனை பலருக்கு உதவும் எண்ணத்தில் பரப்பி வருகின்றனர். ‘பெரி ஹூலியன்’ நீள் வட்டப் பாதையின் ஒரு குவி யத்தில் சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது சூரியனிலிருந்து பூமி அண்மை யாக உள்ள தூரம் உண்மையில் இது அல் பெலியன் அல்ல; மாறாக அபஹூலியன். (சூரிய அண்மைநிலை). இது 14 கோடியே 73 லட்சம் கி.மீ. ஆகும். அதுவே சூரியனிலி ருந்து சேய்மையாக உள்ள தூரம் அபெ லின் (சூரிய சேய்மை நிலை). இது 15 கோடியே 21 லட்சம் கி.மீ. ஆகும். இதற்கு இடையே ஆன உண்மை வித்தியாசம் 3.3 விழுக்காடு ஆகும். ஆனால் பொய் பரவல் தகவலில் 66 விழுக்காடு என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூலை 4 ஆம் தேதி வாக்கில் அப்ஹீலியனும் ஜனவரி 3 ஆம் தேதி வாக்கில் பெரிஹீலியனும் ஏற்படும். இது ஒவ்வொரு வருடமும் ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வுதான். இந்த வருடம் மட்டும் இதற்கு சிறப்பு அம்சம் என்று எதுவும் கிடையாது. மேலும் இந்த வதந்தி தகவலில் குறிப் பிடுவதைப் போல அசாதாரண குளிர் எதுவும் இப்போது ஏற்பட்டு விடப் போவ தில்லை. சென்ற ஆண்டைப் போலவே தான் இந்த ஆண்டும் இருக்கும். கோடைக் காலம், குளிர்காலம் பருவ மாற்றம் பூமி சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றி வருவ தால் ஏற்படுவது. அதற்கும் பூமி சூரிய னுக்கு அருகில் வருவதற்கும் எந்த தொடர் பும் இல்லை. இப்போது நமக்கு குளிர் காலமே இல்லை. வட அரைக்கோளத்தில் வசிக்கும் நமக்கு டிசம்பர், ஜனவரி மாதம் தான் குளிர்காலம். குளிர்காலம், கோடைக் காலம், மழைக் காலம் என்று எந்த வித்தியாசம் ஏற் பட்டாலும் எந்த காலத்திலும் நல்ல சத்துள்ள வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதும் சக்கை உணவு களை தவிர்ப்பதும் எப்போதும் நல்லது தான். இது போன்ற சில அணுக்கமான அன்பான வார்த்தைகளை மேற்பூச்சாக கொண்டு தேவையே இல்லாமல் பரப்பப்படும் வதந்தி களை எளிமையாக பரப்பி விடுகின்றனர். இதை அப்படியே நம்பி பலரும் பரப்பு வதும் பாராட்டுவதுமாக வதந்தி மட்டுமே அதிகமாக பரப்பப்படுகிறது. அவற்றை நம்ப வேண்டியதில்லை. அறிவியலைப் பரப்புவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *