• Tue. Apr 16th, 2024

மொட்டை பெட்டிஷனும் பொய்யான பாலியல் புகாரும்… பழிவாங்கப்பட்டாரா அரசு மருத்துவர்…?

Byகாயத்ரி

Jul 5, 2022

கொரோனா காலங்களில் நாம் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்த சமயங்களில் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர் சிகிச்சைகளில் மேற்கொண்டு இருந்த மருத்துவர்களை நாம் பாராட்டுகின்றோம் .

ஆனால் அதே வேலையில் கொரோனா காலத்தில் ஆரம்ப கட்டத்தில் முந்தைய ஆட்சியில் முக கவசம் கேட்டதற்காக ஒரு மருத்துவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார் . அந்த நேரத்தில் இந்த விஷயம் ஒரு மிகப்பெரிய விவாத பொருளாக மாற்றப்பட்டது மருத்துவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வரும் ஆகிய மு க ஸ்டாலின் இது சம்பந்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் “கொரோனா காலங்களில் ஏன் மருத்துவர் சந்திரசேகர் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இருந்து தூத்துக்குடிக்கு மாற்றப்படுகிறார் ? இதற்கான காரணத்தை அமைச்சர் விளக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்”அதனைத் தொடர்ந்து உடனடியாக தூத்துக்குடி மாறுதல் உத்தரவு திரும்ப பெறப்பட்டது. காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. அதன் பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து மருத்துவர் சந்திரசேகர் மீது பாலியல் புகார் என மொட்டை கடிதம் வந்ததாக கூறி அவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலிருந்து அண்ணாநகர் மருத்துவமனைக்கு தேர்தல் நடைமுறை இருக்கும் பொழுது மாற்றப்பட்டார்.
இதனால் விரத்தி அடைந்த டாக்டர் சந்திரசேகர் தேர்தல் காலம் என்பதால் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் அந்தப் பணியிட மாற்று உத்தரவை பெற்று சட்டப்படி நியாயப்படி அரசு அலுவலர் என்ற முறையில் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு கேட்டிருந்தார். தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் என்பது ஒருவிதமான சதி செயல் எனவும் தான் அவ்விதமான எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகவில்லை எனவும் கூறி தன் துறைக்கு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தொடர்ந்து 11 வருடங்களாக பணிபுரிந்து வருவதாகவும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் ஒரு நல்ல ஆலோசகராகவும் கடந்த காலங்களில் தொடர்ந்து இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவருடன் பணிபுரிந்த பணிபுரிகின்ற பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் இளநிலை மாணவர்கள் பயிற்சி மாணவர்கள் என அனைவரும் நல்ல முறையில் அவரைப் பற்றி விசாரணையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இவர் முதுநிலை மாணவர்களை கண்டிப்புடன் நடத்துவதை வேறு விதமாக திரித்து மாணவர் மாணவிகளை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள் எனவும் தெரிய வந்திருக்கின்றது. புதிதாக சேர்ந்த மாணவிகளிடம் தவறாக சித்தரித்து எழுதி வாங்கியது போல் தெரிகிறது. இறுதி அறிக்கையில் அவர்கள் கூறியது போன்ற நிகழ்வுகள் நடக்கவே இல்லை எனவும் அறுவை சிகிச்சைகளில் அவர்கள் கலந்து கொள்ளவே இல்லை எனவும் அறுவை சிகிச்சை பதிவேட்டின் மூலம் தெளிவாக தெரிகிறது. இறுதி விசாரணையில் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும் இவர் கண்டிப்புடன் இருந்தது நோயாளிகளின் நலன் சார்ந்தது எனவும் கூறி இறுதி ஆணை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தில் பெண் மருத்துவர்களுக்காகவே தனியாக ஒரு கருத்தரங்கை தான் முன் நின்று நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை துறையை தன்னிடம் பயிற்சி பெற்ற இளநிலை மருத்துவர்கள் குறிப்பாக பல பெண் மருத்துவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதற்கு தான் முன்மாதிரியாக இருந்துள்ளதாகவும் மாணவர்களே பல பொது தளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.இவரிடம் பயின்ற முன்னாள் மாணவியிடம் பேசிய பொழுது” சார் ரொம்ப திட்டுவார் தவிர அதுவும் வார்டில் மட்டுமே தவிர மற்றபடி இம்மாதிரியான தவறான பாலியல் குற்றச்சாட்டு என்பது பொய்யான ஒன்று என தெரிவித்தார்”

அவருடைய துறை பேராசிரியர் கூறியதாவது” சரியான நேரத்தில் வார்டு மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார் மேலும் ஒரு நல்ல அறுவை சிகிச்சை பயிற்சியாளராகவும் அவர் இருந்தார் எனவும் அவர் உதவி பேராசிரியராக இருந்த சமயத்தில் எந்த விதமான பிரச்சனைகளும் அவரால் வந்ததில்லை எனவும் தன்னுடைய துறையை மிக நல்ல முறையில் பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்” இளநிலை எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் ஒருவரிடம் கேட்டபோது” சார் நல்லா பாத்துப்பார் , ஆனா வகுப்பு எடுக்கும் பொழுது மிகவும் கண்டிப்பாக இருப்பார். தேசிய அளவில் அறுவை சிகிச்சை மாணவர் கருத்தரங்கை அவர் எங்களுக்காக பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

மேலும் நமது கள ஆய்வு விசாரணையில் தேசிய மகளிர் ஆணைய அறிக்கையிலும் காவல்துறை துணை ஆய்வாளர் அவர்களின் அறிக்கையிலும் இவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்த ஒரு அடிப்படை ஆதாரம் அற்ற மொட்டை பெட்டிஷனில் வந்தது எனவும் விசாரணையில் அவர் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் யாரும் கூறவில்லை எனவும் அவரை பற்றி நல்ல முறையிலே கூறியிருக்கிறார்கள் எனவும் தங்களது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

இதைப்பற்றி மருத்துவ சந்திரசேகர் அவர்களின் வழக்கறிஞர் கூறும் பொழுது தொடர்ந்து மருத்துவருக்கு அவர் பணியை செய்ய விடாமல் அவர் மேன்மேலும் பல பதவிகளையும் பல பாராட்டுகளையும் பெற்று விடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியாலும் இந்த மொட்டை பெட்டிஷனை வைத்து அவரை மனஉலைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். உண்மை தன்மையை முழுவதுமாக அறியாமல் இவரைப் பற்றிய தவறான செய்தியை வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கு ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.மொட்டை பெட்டிஷனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாலேயே இம்மாதிரியாக அதனை தவறாக பயன்படுத்துகின்றனர் .

நேர்மையான மனிதர் கொரோனா காலத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் தன் உயிர்க்கு அஞ்சாமல் கொரோனா வார்டுகளில் 1000 க்கான மக்களை காப்பாற்றியபோதே தமிழக முதலமைச்சர் மு..க.ஸ்டாலினின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *