இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) புதிய தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவரான சோம்நாத்தின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வி.நாராயணன் ஜனவரி 14 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இவர் திருவனந்தபுரம் வலியமலாவில் LPSC-யின் இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.