• Fri. Jan 24th, 2025

தாணுமாலைய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா..!

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோயில்களில் மிகவும் சிறப்பு பெற்றது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் மார்கழி பெரும் திருவிழாவின் 5-ம் நாள் விழாவில் பஞ்சமூர்த்தி தரிசனம், உற்சவ மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புதமான காட்சி தரும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், வாகனங்களில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தார்கள்.

நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.