இயக்குனரான மனோபாலா தற்போது காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருகிறார் டைரக்டர் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே!
இப்படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, அமிர்தா ஐயர், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் செட்டில் ஜீவா உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மனோபாலா. சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் தான் மனோபாலாவிற்கு ஜோடியாக அஜித் பட ஹீரோயின் ஆன மாளவிகா நடிக்கிறாராம்.
42 வயதாகும் மாளவிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சுந்தர்.சி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். வந்ததுமே மனோபாலாவிற்கு ஜோடியாக நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.