• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அதிமுக நடத்தியது தான் ராம ராஜ்ஜியம்.. அது எப்போதும் மலரும்-செல்லூர் ராஜூ

Byகாயத்ரி

Apr 4, 2022

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை (ஏப்-5) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் விரைவில் ராமராஜ்யம் மலரும். ராம ராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவது தமிழக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராம ராஜ்ஜியம்.

எம்ஜிஆர் நடத்தியது ராம ராஜ்யம். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதுதான் ராமராஜ்யம். அதைதான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கின்றேன். திமுக ஆட்சியால் தமிழகம் கலி உலகமாக மாறிவிட்டது. அந்த ராம ராஜ்ஜியத்தை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் அதிமுக கொடுக்கும் என்றும் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது எனவும் கூறினார்.