• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இதுக்கெல்லாமா பொதுநல வழக்கு? – நீதிபதிகள்

மதுரை மாவட்டம் சீல்நாயக்கன்பட்டி கிராம கண்மாய் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது போன்ற வழக்குகளை உரிமையியல் நீதிமன்றங்களில்தான் தாக்கல் செய்ய வேண்டும். கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்றால் முதலில் தாசில்தாரிடம் மனு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்னை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் பொதுநல வழக்குகளாக தாக்கல் செய்யப்படுவது ஏற்புடையது அல்ல’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.