• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கழகத் தலைவர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்..,

ByPrabhu Sekar

Feb 26, 2026

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வார்டில் திமுக சார்பில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பெருங்களத்தூர் தெய்வநகர் 2வது தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு 60வது வார்டு கழக செயலாளர் ஆர். சஞ்சீவி தலைமை தாங்கினார்.

மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு. இரா. ரத்னகுமார் மற்றும் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ச. இராஜேஷ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். ராஜா அவர்கள், திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்து விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் D. காமராஜ், மாமன்ற உறுப்பினர் டி.ஆர். கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கழக பேச்சாளர்கள், வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கூட்டம், பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.