• Fri. Apr 19th, 2024

சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இப்பவோ ? அப்பவோ?

Byகாயத்ரி

Feb 1, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட சற்று தாமதமானதால் இதுவரையில் வேட்புமனுதாக்கல் சூடு பிடிக்கவில்லை.

ஆளும் கட்சியான தி.மு.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. 2 கட்சியுமே சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.இரண்டு கட்சிகளும் இன்று பிற்பகல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளனர். நேற்று தை அமாவாசை என்பதால் சுயேட்சைகள் பலர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

தி.மு.க. மற்றும் அதிமுக நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் என அரசியல் வட்டாரம் கூறுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ள நிலையில் எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சில வார்டுகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அது இன்று பிற்பகலுக்குள் சரியாகி விடும் என்று கூறப்படுகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய 4-ந்தேதி கடைசி நாள் எந்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *