புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாக கவனித்து வருவதாக பெயர் எடுத்துள்ளார். இளம் அமைச்சர் சந்திர பிரியங்கா. குறிப்பாக பெண்களுக்கு இலவச பிங்க் பேருந்து, பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சந்திர பிரியங்கா மேடையில் பெண்களுடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.