

ராஜபாளையம் அருகே 6 வயது சிறுவன் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஹுட் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பொன்னகரம் இல்லம் நடைபெற்று வருகிறது. இந்த இல்லத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் கமல் சஞ்சீவ் வயது 6 என்பவர் கடந்த மூன்று மாத காலங்களுக்கு முன்பு இந்த ஆதரவற்றார் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த சிறுவனின் தாய், தந்தை இருவரும் சண்டையிட்டு பிரிந்து விட்டதால், சிறுவனுக்கு எங்கு செல்வது என்ற நிலையில் இந்த ஆதரவற்ற இல்லத்தில் வந்து சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை உணவு முடித்து வெளியே சிறுவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயம் இந்த சஞ்சீவ் என்ற சிறுவனை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுவனை அருகில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் அந்த நபர் தள்ளிவிட்டதாகவும், அதன் காரணமாக அந்த சிறுவர் கிணற்றில் மூழ்கி இறந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸ் படை விரைந்தது. அங்கு சென்றபோது, அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்த அந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபரை விசாரணை செய்தபோது, உள்ளே குளித்துக் கொண்டிருப்பதாக கூறி, தெரிவித்து விட்டார். உடனடியாக ராஜபாளையம் தீ அணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 40 அடி ஆழத்திற்கும் கீழே இருந்த தண்ணீரில் மூழ்கியும் பாதாள கரண்டி போட்டும் சிறுவனது உடலை மீட்டனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னுக்குப் பின் மரண தகவல்கள் தெரிவித்ததால், குழப்பம் அடைந்த போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இல்ல நிர்வாகி உள்பட பல்வேறு நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

