• Thu. Apr 25th, 2024

காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் போதுமா ? ப.சிதம்பரம் கேள்வி

ByA.Tamilselvan

Oct 10, 2022

சந்தைக்கு சென்று காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா எனநிர்மலா சீதாரானிடம் ,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான சிதம்பரம் பேசும்போது கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநரே ஒப்புக் கொள்கிறார். மயிலாப்பூர் சந்தைக்கு சென்று (மத்திய நிதி மந்திரி) காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *