• Sat. Apr 20th, 2024

ஆப்கானுக்கு உதவுகிறதா இந்தியா?

Byமதி

Oct 21, 2021

மனிதாபிமான ரீதியில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதில் இருந்து,
ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப
பற்றியுள்ளது தலிபான்கள். சட்ட திட்டங்களை மிகவும் கடுமையாக்கியும் உள்ளன. இந்த அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலீபான்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை, ஆட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷியாவின் தலைமையில் நேற்று மாஸ்கோ நகரில் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளை தலீபான் நிர்வாகிகள் குழு சந்தித்தது.

மேலும், தலிபான்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ள நிலையில் முதல்முறையாக அவர்களுடன் இந்திய குழு ஒன்று பேச்சு நடத்தியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இச்சந்திப்பில் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஜெ.பி.சிங்கும் தலிபான்கள் தரப்பில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபியும் பேசினர்.

இதன் பின் அறிக்கை வெளியிட்டுள்ள துணை பிரதமர் ஹனாஃபி, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளதாக கூறினார். எனினும் இதுகுறித்து இந்திய தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *