• Fri. Apr 19th, 2024

திமுகவின் பிடீம் ஆக இயங்கப்போகிறாரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்யின் சந்திப்புக்கு பின்னர் தான் விஜய் மீது பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது திமுக என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாகவே விஜய்க்குள் இருந்தாலும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற அவசர நிலைக்கு ஆளாகி விடக்கூடாது என்றுதான் அவரை கண்டித்து வைத்துவிட்டு, பொறுமையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் விஜய் என்கிறது அவரது வட்டாரம்.

உள்ளாட்சித் தேர்தல்களில் தனது மன்றத்தினரை களம் இறக்கி ஆழம் பார்த்திருக்கிறார் விஜய். இதில் அவருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இதன் பின்னர்தான் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பாக தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அடுத்து வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலையும் கணக்கில்கொண்டு நடிகர் விஜய்யை களமிறக்கி அவருக்கு தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பிரசாந்த் முடிவெடுத்து விட்டதாக தகவல் பரவுகிறது.

விஜய்யின் இந்த அரசியல் வருகையை விரும்பாத உதயநிதி ஸ்டாலின் தரப்பினர் தான் , விஜய்க்கு அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட காரணம் என்று தகவல். அதேநேரம் பாஜகவினரின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பிடிக்காத திமுக , பிரசாந்த் கிஷோர் வாயிலாக விஜய்யை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறது திமுக. விஜய் திமுகவின் பி டீம் ஆக களமிறங்கப் போகிறார் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *