இந்திய ரயில்வேயின் இ- டிக்கெட் தளமான ஐஆர்சிடிசி இன்று திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்திய ரயில்வேயின் இ-டிக்கெட் தளமான ஐஆர்சிடிசி இன்று முடங்கியது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷனின் மொபைல் செயலி தற்காலிகமாக முடங்கியது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அத்துடன் டிக்கெட் புக்கிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதேபோல் காலை 10 மணிக்கு ஏ.சி. புக்கிங் நேரத்திலே ஐஆர்சிடிசி செயலி முடங்கியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக செயலி முடங்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஐஆர்சிடிசி முடங்கியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டில் இதுவரை முதலீட்டாளர்களுக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது.