• Fri. Jan 17th, 2025

இஸ்ரோவின் தலைவராக மீண்டும் ஒரு தமிழர் நியமனம்!

ByIyamadurai

Jan 8, 2025

இந்திய விண்வெளித் துறையின் (இஸ்ரோ) தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 14 முதல் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரை விண்வெளித் துறையின் தலைவராக நியமித்து அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்பி,எஸ்சியின் இயக்குனரக பணியற்றியுள்ளார்.இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மேலும் இவர் GSLV Mk Ill ஏவுகணையின் C25 Cryogenic Project திட்ட இயக்குநராக இருந்தவர். இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவன் பணியாற்றினார். இவரைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.